vikram

Advertisment

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் இப்படம் தமிழ், இந்தியில் தயாராகி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 32 மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்நிலையில் கர்ணனாக நடிக்கும் விக்ரம் இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். மேலும் குதிரையேற்ற பயிற்சிகளும் எடுத்து வருகிறார். ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.