இயக்குனராக அவதாரமெடுத்த விஜய்சேதுபதி பட நடிகை!

மலையாளசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமான ரம்யா நம்பீசன், அதனை தொடர்ந்து மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அதேபோல தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக நடித்து வந்தார்.

ramya nambeesan

தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘தமிழரசன்’, ரியோவுடன் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி ஹிட் அடித்துள்ள அஞ்சாம் பாதிரா படத்திலும் ரம்யா நம்பீசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரம்யா படங்களில் நடிப்பது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களும் பாடி வருகிறார். பாண்டியநாடு படத்தில் வரும் ஃபை ஃபை பாடலை இவர்தான் பாடினார். இப்படி சினிமாவில் பல துறைகளில் பணியாற்றி வந்த ரம்யா, தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

alt="day" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3800e8c4-6d38-45bc-b97c-8a0a7f73e660" height="248" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Day-Night-article-inside-ad_4.jpg" width="414" />

‘அன்ஹைட்’ என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து எடுத்திருப்பதால் ஃபிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வேலண்டைன்ஸ் தினத்தன்று இதை வெளியிட திட்டமிட்டுள்ளார் ரம்யா நம்பீசன்.

director ramya nambeesan
இதையும் படியுங்கள்
Subscribe