Skip to main content

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய் சேதுபதி? 

Published on 28/02/2018 | Edited on 02/03/2018
vr


தீவிர அரசியலில் ஈடுபடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0, காலா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினி அடுத்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் விஜய் சேதுபதி ஏதாவது ஒரு வேடத்தில் நடித்துவிடுவார். அது போல் அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகயிருக்கும் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வந்துள்ளது. மேலும் ரஜினிக்கு எதிராக ஒரு பவர்புல் வில்லன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது விஜய் சேதுபதி நடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும்  நம்பப்படுகிறது. சமீபத்தில் விஜய்சேதுபதி அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னை எப்போது நடிக்ககூப்பிட்டாலும் நான் அப்படியே சென்றுவிடுவேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்