style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார். ஒயிட்லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.