Advertisment

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி மகன்; வெளியான சூப்பர் அப்டேட்

vijaysethupathi son starring vetrimaaran viduthalai film

Advertisment

அசுரன் பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட்' சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கும் என கூறப்படுகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞராகநடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்தனது தந்தை விஜய்சேதுபதியுடன் நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில்நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

viduthalai actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe