Advertisment

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படம்! 

michael movie first look

Advertisment

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் 'மைக்கேல்' படத்தை இயக்கிவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா வகையிலான படமாக உருவாகிவரும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனமும் கரண் சி புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe