Advertisment

கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் நடிக்கும் விஜய்சேதுபதி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

gjgjg

Advertisment

பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

muthaiya muralidharan vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe