/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_38.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். லலித் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்திவந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில்நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணம் குறைப்பது குறித்து அவர் கோரிக்கை வைத்தார். முன்னதாக, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு ஒருநாள் கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ. 28,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)