Advertisment

''அவர் ஒரே ஒரு சீனில் தோன்றினாலும் அவருக்கென்று தனி முத்திரை பத்தித்துடுவார்'' - விஜய்சேதுபதி புகழாரம் 

மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, புது முக நடிகை மனிஷா ஜீத் இணைந்து நடித்துள்ள 'அல்டி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி நடிகர் மயில்சாமி குறித்தும், அவரது மகன் குறித்தும் பேசியபோது...

Advertisment

vijaysethupathi

"எனக்கு மயில்சாமி அண்ணன் மேல் எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது மகன் அன்புக்கு ஒரு பரிந்துரை சொல்ல விரும்புகிறேன். நடிகர் மயில்சாமி படங்களில் ஒரே ஒரு சீனில் தோன்றினாலும் அவருக்கென்று தனி முத்திரை பத்தித்துவிட்டு சென்றுவிடுவார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கு அவரின் பங்களிப்பு இருக்கும், அதேசமயம் அந்த காட்சி அவரால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்ட சுவாரஸ்யமாக மாறியிருக்கும். அந்த அளவு அவர் அர்ப்பணிப்பு உள்ள நடிகர். அதுபோல் அவரது பேச்சு மிகவும் தெளிவாக இருக்கும்.

Advertisment

kaithi

அது அரசியல், மக்கள், சினிமா என எதை சார்ந்து பேசினாலும் அதில் நல்ல தெளிவு இருக்கும். அவர் எந்த விஷயத்திலும் தேவை இல்லாததை செய்யமாட்டார். அதனால் எல்லா இடத்திலும் அவருக்கென்று தனி மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை அவரும் காப்பாற்றிக்கொண்டு வருகிறார். உங்கள் தந்தை பெரிய ஜாம்பவான். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவையெல்லாம் அன்புவை போய் சேரட்டும். இப்படம் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/adwr-WNdnG8.jpg?itok=YSWYgwXn","video_url":" Video (Responsive, autoplaying)."]}

mayilsamy vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe