bfbnfbfbfbnfb

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர்கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார்.

Advertisment

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் லடாக் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் இரண்டாவது உலகப்போர் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதில் சக போர் வீரனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு பதில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.