vijaysethupathi

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். இவர், தற்போது ‘ஃபேமிலிமேன்’ இணைய தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகேவுடன் கைகோர்த்துள்ளார். ராஜ் மற்றும் டீகே தற்போது அமேசான் ப்ரைம் தளத்திற்காக ஒரு வெப் தொடரை இயக்கிவருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தத் தொடரில் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்க,விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், 10 அத்தியாயங்கள் கொண்ட முதல் சீசனுக்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியும் ராஷி கண்ணாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஷி கண்ணா, விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.