trisha

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் '96'. பள்ளி பருவ காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி 100 நாட்களை கடந்ததை கொண்டாடும் விதமாக நேற்று விழா ஏற்பாடு செய்து படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் ஷீல்டு வழங்கப்பட்டது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது....

Advertisment

trisha

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"சில விஷயங்களை நான் ஆள் வெச்சி தான் செய்யணும்னு ஆசை பட்றேன். இந்த படம் முழுவதும் நம்மை ஏமாற்றி, காக்கவைத்து கடைசி வரைக்கும் ஒரு தடவையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களான்னு ஏங்கவைத்த விஜய்சேதுபதி, திரிஷா இப்போது இங்கு ஒரே ஒரு தடவை கட்டி அணைத்து இந்த 100வது நாள் விழாவை சிறப்பிக்கணும்" என்று கூற உடனே விஜய்சேதுபதி, திரிஷா இருவரும் கட்டி அணைத்து விழா அரங்கை நெகிழ்ச்சியாக்கி கைத்தட்டல்களால் அதிரச்செய்தனர். மேலும் கட்டி அணைத்த பின் 'இதுதான் '96' படத்தின் கிளைமாக்ஸ்' என விஜய்சேதுபதி கூறி மீண்டும் ஒரு முறை அரங்கத்தை உற்சாகப்படுத்தினார்.