பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள மூன்று கல்லூரிகளில் காற்று மாசுக்கு நடுவே இடையூறு இல்லாமல் நடந்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_96.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/miga miga avasaram youtube bar ad_7.jpg)
இதைதொடர்ந்து படக்குழு வரும் நவம்பர் 27ஆம் தேதியோடு டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சிக்மகளூர் செல்லவிருக்கின்றனர். அங்கே தொடர்ந்து 45 நாட்கள் நடக்கவுள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதற்காக அங்கே மிக பெரிய ஜெயில் செட் போடப்படுகிறது. அதில் உள்ள சீர்திருத்த பள்ளியில் இருக்கும் விஜய்சேதுபதி அங்கே உள்ளவர்களை மீண்டும் தவறான பாதைக்கு செல்ல தூண்டுவது போலவும், அதை கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய் எதிர்த்து கைதிகளை நல்வழிப்படுத்துவது போலவும் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக படத்தின் நம்பத்தகுந்த நெருங்கிய வட்டாரத்திலுருந்து தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகி மாளவிகா மோகனன் கல்லூரி பேராசிரியையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us