style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே.புரொடக்ஷன்ஸ் தற்போது விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ள இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது. 'சேதுபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் இப்படம் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவுள்ளது.