Advertisment

'நீயெல்லாம் இங்க வரக்கூடாது' - சிறுமிக்கு அட்வைஸ் செய்த விஜய்சேதுபதி 

vijay sethupathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் '96' படகுழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது நடிகர் விஜய்சேதுபதி ஒரு கேள்வி எழுப்பிய சிறுமியிடம் அட்வைஸ் செய்து பேசியபோது... "இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு உங்களைப் போன்ற சிறுமியை அழைத்து யார் வந்தது. இதுபோன்ற கூட்டங்களுக்கு நீங்கள் வராதீங்க மா. நீங்கள் பெரியவள் ஆகிய பிறகு இதுமாதிரியான கூட்டங்களுக்கு வரலாம். இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இந்த வயதில் நீங்கள் விளையாட வேண்டும். எப்படி இருந்தாலும் நீங்கள் பெரியவர் ஆகிவிடுவீர்கள். ஆனால் பெரியவர்கள் ஆகியதற்கு பிறகு நீங்கள் சிறியவர்களாக மாறமுடியாது சரியா. நீங்கள் கேட்ட கேள்வி அழகாக இருந்தது. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுடைய உடை அழகாக உள்ளது. க்யூட்டாக இருக்கிறீர்கள். போய் சந்தோஷமாக விளையாடுங்கள்" என்று அட்வைஸ் செய்து சிறுமியை அமரச்செய்தார் நடிகர் விஜய்சேதுபதி.

96
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe