விஜய் மகன் அறிமுகமாகும் படத்தில் வில்லனாகிறாரா விஜய் சேதுபதி..?

விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, தற்போது உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

fsf

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றி உள்ளதாகவும், இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு படத்தை போல் இப்படத்திலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe