Vijay's wife sangeetha watch FDFS Viruman movie

Advertisment

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து விருமன் படத்தை பார்த்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="620f70f1-161c-4747-ad3b-003f970677cf" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_14.jpg" />

இந்நிலையில் விருமன் படத்தின் FDFS- ஐ பார்க்க நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்திருந்தார். இதை அங்கிருந்த ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் விருமன் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.