பிகில் படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் படங்கள் கேரளா சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இணையாக கேரளாவில் வசூல் செய்கின்றன. அந்தளவிற்கு நடிகர் விஜய்க்கு கேரளா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் தெருக்கு தெரு விஜய்யின் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
விஜய்யின் ஐம்பதாவது படமான சுறா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை கேரளாவிலுள்ள கொல்லம் விஜய் ரசிகர்கள் ஜி மேக்ஸ் சினிமாஸ் என்கிற தியேட்டரில் கடந்த 26ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்துள்ளனர்.
இந்த படம் வெளியான அன்று விஜய் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க தியேட்டரில் கொண்டாடினர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு, உலா வந்தது.