/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/258_6.jpg)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத்திகழும் விஜய், வம்சி இயக்கத்தில்பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 280 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தின் 'ஜிமிக்கி' பாடலின் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாக படித்து வருகிறார். அவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
முன்னதாக விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலின் மூலம் திரையில் தோன்றினார் ஜேசன் சஞ்சய். பின்பு அவருக்கு இயக்கத்தில் ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதனால் தற்போது குறும்படங்கள் இயக்கி வருவதாகத்தெரிகிறது. விரைவில் முழுநீளப் படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)