அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீிட்டு விழா சென்னையில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த வருட தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay-with-lokesh_1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.
இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நாற்பது நாட்கள் நடைபெற இருப்பதாகவும். படத்தில் நடிக்க இருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கான தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)