Vijay's Leo create record in England

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர் என அவ்வப்போது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படத்தினை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இங்கிலாந்தில் வெளியீடு செய்யவுள்ள நிலையில், வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனை படைத்துள்ளது. இப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த 'வாரிசு'திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் 'லியோ' திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனைபடைத்துள்ளது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது. பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளைத்தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இப்படம், இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. இப்படம் அமெரிக்காவில்அதிக வசூலையும் பெற்றது.

Advertisment