vijay milton

Advertisment

சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து இருக்கின்ற இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இருந்தும் ஒரு பக்கம் இப்படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்க்கும் போதே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று நினைத்தேன். திரைத்துறையில் இருந்துகொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் ‘ஏ’ படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை. ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது. ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்" என்றார்.

iamk