Advertisment

சமந்தாவிற்கு வந்த நோயின் தீவிரம் குறித்து.... - விஜய் தேவரகொண்டா உருக்கம்

 Vijaydevarakonda on the seriousness of Samantha's illness

Advertisment

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘குஷி’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் புரொமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அப்படியானதொரு புரொமோசன் நிகழ்வில்இதில் சமந்தா மயோசிடிஸ் நோயால் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது குறித்து விஜய் தேவரகொண்டா பேசினார்.

நிகழ்வில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது “குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரின் புன்னகையோடு இப்படத்தை தொடங்கினோம். ஒரே கட்டமாக 60 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஜூலை மாதம் சமந்தாவின் உடல்நிலை மோசமானது. அவர் உடல்நிலை சரியில்லை என சொன்னபோது கூட, அவர் அழகா தான் இருக்கிறார், அவருக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என நானும் இயக்குநரும் லேசாக எடுத்துக்கொண்டோம். பின்னர் தான் அதன் தீவிரம் எங்களுக்கு தெரியவந்தது”

“ஆரம்பத்தில் அதுகுறித்து சமந்தா எதுவும் பேசவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அவரே தன் உடல்நல பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தீவிரத்தால் ஒரு கட்டத்தில் எங்களிடம் கூட பேசவில்லை. எங்களை பார்க்கவும் விடவில்லை. அந்த அளவுக்கு கடுமையான வேதனையை அனுபவித்து இருக்கிறார். இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இங்கிருக்கும் லைட்களால் அவருக்கு தலைவலி ஏற்படும், இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் மீதுள்ள அன்புதான் காரணம்” என்றார்.

Kushi movie samantha Ruth Prabhu vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe