பாலியல் வழக்கு; நடிகையிடம் ரூ.1 கோடி பேரம் பேசும் பிரபல நடிகர்!

Vijaybabu has negotiated give rs 1crores  actress if case withdrawn

மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில்நடித்துப்பிரபலமானார் விஜய்பாபு. இவர்மீதுகோழிக்கோட்டைச்சேர்ந்த நடிகை ஒருவர்சினிமாவாய்ப்பு வாங்கிதருவதாகக்கூறிதன்னை பாலியல் வன்கொடுமைசெய்ததாககுற்றம் சாட்டியிருந்தார். மேலும் அதனைவீடியோஎடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்தபோலீசார்தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து விஜய்பாபுதன் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையின் பெயரை சமூகவலைத்தளபக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் வெளியிட்டதால் விஜய்பாபுவின்மீதுபோலீசார்மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நடிகர் விஜய்பாபுதுபாய்க்குதப்பித்துசென்ற நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படிபோலீஸ்அவருக்குசம்மன் அனுப்பியது.இதனைத்தொடர்ந்து விசாரணைக்குஆஜரான விஜய்பாபு, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை, இருவரும் சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம். என் படத்தில் அந்த நடிகைக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால் என் மீது தவறான குற்றச்சாட்டைவைத்துள்ளார் என்று தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதையடுத்து அவரின்செல்போன்பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல்துறைக்குசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர்விஜய்பாபுவழக்கைவாபஸ்வாங்கினால் ரூ. 1 கோடி தருகிறேன் என்று பேரம்பேசுவதாகச்சம்பந்தப்பட்ட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் என்ன நடந்தாலும் இந்த வழக்கை நான்வாபஸ்வாங்க மாட்டேன் எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Subscribe