Advertisment

பாதியில் நிறுத்தப்பட்ட ஆர்.ஆர்.ஆர்; திரையரங்கை பிரித்து மேய்ந்த ரசிகர்கள்

Vijayawada RRR movie release theater damage

Advertisment

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள உள்ள ஒரு திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கு கண்ணாடிகளை உடைத்து, இருக்கைகளை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் திரைக்கு முன் திரையரங்க நிர்வாகம் ஆணிகளை பாதித்துள்ளது. அதையும் சேர்த்து தகர்த்துள்ளனர். இதையடுத்து தகவலின்பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தியுள்ளனர்.

ss rajamouli RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe