/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_81.jpg)
கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்தழுவி தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்'. இப்படத்தை ரிஷிகா சர்மா இயக்க நிஹால் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைப் பணிகளை கோபி சுந்தர் மேற்கொண்டுள்ளார். ஆர்.எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 'காளிதாசா சாகுந்தலா' வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடல் மதுர கவி எழுதபாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் வெளியீட்டு விழா பெங்களூரில் உள்ள பிரபலமான ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படம் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்துத்துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி.ஆர்.எல் எனும் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)