vijayalakshmi reply for fan trolled

சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான விஜயலட்சுமி அடுத்ததாகஅஞ்சாதே, கற்றது களவு, கசட தபற உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிக்களிடையேபிரபலமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெரோஸ் முகமது என்பவரைதிருமணம் செய்து கொண்ட இவருக்குஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமூக வலைதளங்களில்ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

Advertisment

அந்தவகையில்நடிகை விஜயலட்சுமி தான் நடனமாடிய வீடியோ ஒன்றைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ஒரு பெண், அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? எனக் கேள்வி எழுப்பிருந்தார். இதை பார்த்து கடுப்பான விஜயலட்சுமி, "அம்மா ஆகிவிட்டதால்மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா? வாழ்க்கை முடிந்து விட்டது என்று குடும்பத்திற்காக தியாகிஆக வேண்டுமா? நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள். எனக்கு என்று ஒரு வாழ்க்கைஇருக்கிறது. அதை நான் வாழ்வேன். நடனம் ஆடுவேன், விரும்பிய உடைகளை அணிவேன். உங்களை போன்றவர்களால்தான்தாயான பெண்கள் மன அழுத்தத்தில்இருக்கிறார்கள். பொறாமையால் இது போன்றுகமெண்ட்ஸ் செய்யாதீர்கள்" எனபதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment