Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிக்பாஸ் நடிகை!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

vgdvbsdbds

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 


தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், ‘சென்னை 28’ பட நாயகியும், பிக்பாஸ் 2 பிரபலமுமான நடிகை விஜயலட்சுமி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "அண்ணா நகரில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க தடுப்பூசி மையத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டேன். நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவாகும் 'மிடில் கிளாஸ்'

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

munishkanth and vijay lakshmi starring middle class movie

 

Axess Film Factory சார்பாக டில்லிபாபு தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் 'மிடில் கிளாஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் காமெடி நடிகர் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, வேல ராமமூர்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

 

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, அதில் காமெடி கலந்த ட்ராமா படமாக இப்படத்தை இயக்குநர் உருவாக்க உள்ளார்.  இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

Next Story

இந்த ஆட்டம் தேவையா? ரசிகரின் கேள்விக்கு கடுப்பான பிரபல நடிகை

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

vijayalakshmi reply for fan trolled

 

சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான விஜயலட்சுமி அடுத்ததாக அஞ்சாதே, கற்றது களவு, கசட தபற உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிக்களிடையே பிரபலமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

 

அந்தவகையில் நடிகை விஜயலட்சுமி தான் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ஒரு பெண், அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? எனக் கேள்வி எழுப்பிருந்தார். இதை பார்த்து கடுப்பான விஜயலட்சுமி, "அம்மா ஆகிவிட்டதால் மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா? வாழ்க்கை முடிந்து விட்டது என்று குடும்பத்திற்காக தியாகி ஆக வேண்டுமா? நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள். எனக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நான் வாழ்வேன். நடனம் ஆடுவேன், விரும்பிய உடைகளை அணிவேன். உங்களை போன்றவர்களால்தான் தாயான பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். பொறாமையால் இது போன்று கமெண்ட்ஸ் செய்யாதீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.