Advertisment

'ரோப்பும் இல்ல, டூப்பும் இல்ல'; மாஸ் காட்டிய விஜயகாந்த் 

sethupathi movie climax no rope and no technique used Vijayakanth

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஆக்ஷன் நாயகனாக அறியப்பட்ட விஜயகாந்த் 90கள் காலகட்டத்தில் தொடர்ந்து பல அதிரடி படங்களைக் கொடுத்து வந்தார். அந்த பட்டியலில் கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் வெளியான சேதுபதிஐ.பி.எஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்த் மணிக்கூண்டில் ஏறி அதில் இருக்கும் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியைத் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடினர்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜயகாந்த் ரோப் மற்றும் டூப் எதுவும் இல்லாமல் நடித்ததாக ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் தனது தாத்தா சரவணன், ஸ்டண்ட் டபுள் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் விஜயகாந்த்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் பற்றி பெருமைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

dmdk 'Vijayakanth-40
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe