vijayakanth son shanmuga pandian starring kutra parambarai novel direct by sasikumar

Advertisment

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். சசிகுமார் படம் இயக்குவதை விட்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'ராஜவம்சம்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் 'காமன் மேன்' படத்தில் நடித்து வரும் சசிகுமார் அடுத்தாகஇயக்குநர் பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.இதற்கான கதையை இயக்குநர் வேல ராமமூர்த்தி எழுத சசிகுமார் வெப் தொடராக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இருவருக்கும் இடையேகுற்றப்பரம்பரை கதை இயக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் சசிகுமார் இப்படத்தின் பணிகளில்ஈடுபட்டு வருவதாக சினிமா வாட்டரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கஇருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.