Skip to main content

“உறுப்பு நான் தருகிறேன்” - வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்ட தொண்டர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

vijayakanth health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், ஃபெப்சி தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு திரையுலகினர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். பின்பு “விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் கண்டிப்பாக திரும்ப வருவார் எனவும் செய்தியாளர்களிடம் கூறினர். 

 

இந்த நிலையில் விஜயகாந்த்திற்கு உறுப்பு தேவைப்பட்டால் நான் தர தயாராக இருக்கிறேன் என ஒரு தேமுதிக தொண்டர் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியது, “விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என நியூஸில் பார்த்தேன். நான் குவைத் நாட்டில் இருக்கிறேன். தலைவருக்கு நுரையீரல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க வேண்டுமென சொல்லியிருக்காங்க. என் தலைவனுக்கு கிட்னி, கல்லீரல், நுரையீரல் என எந்த உறுப்புகள் தேவைப்பட்டாலும்  நான் தர தயாராக இருக்கிறேன். நான் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவன். இப்போது குவைத்தில் வேலை பார்த்து வருகிறேன். உடனடியாக தேவைப்பட்டால் உடனே நான் அங்கு புறப்பட்டு வருகிறேன். மனப்பூர்வமாக தருகிறேன். இதை என்னுடைய முழு சம்மதத்தோடு சொல்கிறேன். இதை பிரேமலதாவிற்கு தெரியப்படுத்துங்கள். வாழ்க தேமுதிக” என கண்கலங்கிய படியே பேசியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய உயிரிழப்பு; தேமுதிக போராட்டம் அறிவிப்பு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
struggle Announcement DMDK party for kallakurichi incident

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகையச் சூழலில் கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போதையில்லா தமிழகத்தை உருவாக்கத்தவறிய திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25 இல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (25-02024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.