Advertisment

ரூ. 8 லட்சம் செலவு; 80 தொழிலாளர்கள் - விஜயகாந்த்திற்கு மரியாதை

A Vijayakanth fan took 80 laborers to the Vijayakanth memorial at his own expense

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமான விஜயகாந்த், மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Advertisment

மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் விஜயகாந்த் ரசிகர் ஒருவர், அவரது சொந்த செலவில் 80 தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த மாயன் என்ற ரசிகர், தனக்கு கீழ் பணிபுரியும் 80 தொழிலாளர்களை 8 லட்சம் ரூபாய் செலவு செய்து, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரவழைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

dmdk vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe