Advertisment

விஜயகாந்தின் சமூக வலைத்தளப் பக்கம் ஹேக்! 

vijayakanth faceboook page hacked

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தேமுதிக நிறுவனத் தலைவரராகவும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவரது நினைவிடத்தில் 125 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அதனைப் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூகையால் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. அவரது பக்கத்தில் வழக்கமாக அவருடைய கட்சி தொடர்பான செய்திகளேவெளியாகி வந்த நிலையில் தற்போது சம்மந்தமில்லாத சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dmdk premalatha vijayakanth vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe