விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார். மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay_35.jpg)
இதற்கு விஜய்தான் தான் காரணம் எனவும், 'நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்' என்று அவர் சொன்னதால்தான் சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை அதற்கான கால அளவுக்குள் படமாக்க முடியவில்லை. இதனால், 'தளபதி 63' படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)