Advertisment

விஜய் யேசுதாஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரே நபர்?

vijay yesudas home jewellery theft case update

Advertisment

பாடகர் விஜய் யேசுதாஸ்சென்னைஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்ஷா தங்கள் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாகசில தினங்களுக்கு முன்பு அபிராமபுரம் காவல் நிலையத்தில்புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டில் பணிபுரியும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகபுகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அவர் வீட்டில் பணிபுரிந்த 3 நபர்களிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் நகை திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஓட்டுநர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது.

ஓட்டுநர் வெங்கடேசன், முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் பணிபுரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

aishwarya rajinikanth vijay yesudas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe