விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார். மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.

vijay

Advertisment

மேலும் பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் தான் காரணம் எனவும், 'நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்' என்று அவர் சொன்னதால்தான் சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.