vijay wishes thirumavalavan for his birthday

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் இன்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, வி.கே.சசிகலா, கமல்ஹாசன் மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருமாவளவன் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொலைப்பேசி வாயிலாக தனக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் வாழ்த்துக் கூறிய விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வருட திருமாவளவனின் பிறந்தநாளுக்கும் இதே போல் தொலைப்பேசி வாயிலாக விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சத்யராஜும் தனக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவருக்கு நன்றி எனவும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.