நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் எக்ஸ் தளம் மூலமாகத் தங்களதுவாழ்த்து பதிவைப் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், விஜய் தொலைப்பேசி வாயிலாக சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.