பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Advertisment

vijay64

தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கர்நாடாவிற்கு சென்றுள்ளது. அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் இந்த படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மத்தியில் விஜய் பாடவுள்ள பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Rajapaksha