இயக்குனர் அட்லியும் நடிகர் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்து பணி புரியும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தற்போதுவரை பெயர் வைக்கவில்லை, அதற்குபதிலாக ‘தளபதி 63’ என்று குறிப்பிடப்படுகிறது. வில்லு படத்திற்கு பின் விஜய்யுடன் நயன்தாரா இப்படத்தில் ஜோடி சேர, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகுவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஈ.வி.பி பிளிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.