விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு இம்மாதம் விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்த நிலையில் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ரசிகர்களுடன் திரையரங்கில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார். அவர் பார்ப்பது பிரபாஸ் நடித்த சலார் படம் என்றும் ஹைதராபாத்தில் தி கோட் பட படப்பிடிப்பின் போது அவர் பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.