vijay

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில், திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட நிலையில், முதன்முறையாக விஜய் மக்கள் இயக்கமும் களமிறங்கியது. போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் திமுக ஆதரவு வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.

Advertisment

இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 பேரையும் நடிகர் விஜய் நேற்று முன்தினம் (25.10.2021) சந்தித்தார். தேர்தலில் வெற்றிபெற்றவர்களோடு நீண்ட நேரம் உரையாடிய விஜய், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 129 நபர்களுடன் இணைந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment