விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (Greatest of All Time) என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளைத்தொடர்ந்துமீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் விவேக் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, வாரிசு பட படப்பிடிப்பின் போதுஎடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பேட் செய்யும் விவேக்கை கைதட்டி ஊக்கப்படுத்துகிறார். அவர் தூக்கி பவுண்டரி லைனில் பாலை அடிக்க, அது ஃபோர் என்று எதிரணியினர் சொல்கின்றனர். உடனே, “நீ அடிச்சா சிக்ஸா... சிக்ஸு சிக்ஸு... அதெல்லாம் இல்லை...இதேதான் அடிச்ச நீ” என ஜாலியாக வாதாடுகிறார்.இதில் ராஷ்மிகா, யோகி பாபு, இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'வாரிசு'. தில்ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் விவேக் தான் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.