நேற்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவாக நண்பர் தினத்தில் நண்பர்கள் குழுவாக கூடி வெளியே சென்று கொண்டாடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஆனால், தற்போதைய லாக்டவுன் சூழ்நிலையில் அப்படி யாராலும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் இருக்கின்றனர். இதனால் வீடியோ கால் மூலம் நண்பர்கள் அனைவரும் குழுவாக பேசி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் கல்லூரி நண்பர்கள்இருக்கின்றனர்.