vijay venkat prabhu the goat movie song released

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஏஐ தொழில் நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த் நடித்துள்ளார். தணிக்கை குழுவில் யு.ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இப்படத்திலிருந்து இதுவரை ‘விசில் போடு...’,‘சின்ன சின்ன கண்கள்...’,‘ஸ்பார்க்...’ ஆகிய பாடகள் வெளியாகியுள்ளது. இப்பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவும் கடந்த 17ஆம் தேதி வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் நான்காவது பாடல் ‘மட்ட’ இன்று வெளியாகும் என்றும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. அவரும் தனது எக்ஸ் பக்கத்தில் இப்பாடலின் சில வரிகளை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ‘மட்ட’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய்யின் முந்தைய படங்களான கில்லி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் அவர் செய்யும் சில சைகைகள் இதில் இடம்பெற்றுள்ளது. இதனை டி-ஏஜிங் செய்யப்பட்ட விஜய் செய்து காட்டுகிறார். அதைத் தொடர்ந்து விஜய்யின் சில நடனங்களுடன், ‘என்னா நட... என்னா நட... ஏறி வரா ஜிலுக்கா... கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா...’ என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment