Advertisment

“கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு சென்னை வந்தார்; இப்போது மீண்டும்” -விஜய் வசந்த் உருக்கம்

vasantha kumar

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் கடந்த 28ஆம் தேதி மாலை மறைந்தார். 29ஆம் தேதி பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட அவரது உடல், நேற்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு பெற்றோர் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. எம்.பி. வசந்தகுமாரின் மறைவிற்கு பிரதமர், எதிர்கட்சி தலைவர், சினிமா பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் எம்.பி வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த், அப்பா குறித்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். அதில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு என் அப்பா சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கனவு நனவானதும் அவர் தனது கிராமத்துக்கு ஓய்வெடுக்க ஒரு முழுமையான மனிதனாக திரும்பி சென்றுள்ளார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி"என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

MP VASANTHAKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe