Advertisment

'கண்ணெதிரே காலம் நின்று விடுமா' - அம்மா சென்டிமென்டில் உருக வைக்கும் விஜய்

vijay varisu third single Soul Of Varisu song lyrical video released

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். ஏற்கனவே இப்படத்தில்விஜய் பாடிய 'ரஞ்சிதமே', சிம்பு பாடிய 'தீ தளபதி' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் குடும்ப பின்னணி கதையைக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இப்பாடல் அம்மா சென்டிமென்டை மையப்படுத்தியதாக இருக்கிறது. இப்பாடலை பார்க்கையில், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரது அம்மாவை விஜய் சந்திப்பது போலவும், விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் அம்மா இப்பாடலை பாடுவதாகத்தெரிகிறது. மேலும் 'கண்ணெதிரே காலம் நின்றுவிடுமா' என்று வரும் வரிகள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

பிரபல பாடகி சித்ரா குரலில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு மனம்உருகும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

dil raju Vamshi Paidipally varisu movie actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe