vijay in varisu movie first single update released

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b6adbc4d-fc2f-4fd5-bdca-01a208e6ac08" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_17.jpg" />

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல்பாடலின் ப்ரோமோ இன்று (03.11.2022) மாலை 6.30 மணியளவில்வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பாடலைஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Advertisment

இப்படத்துக்கு வசனம், கூடுதல் திரைக்கதை மற்றும் பாடல்களைபாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இவர் விஜய்யின் பல படங்களுக்கு தொடர்ந்து பாடல் வரிகள் எழுதி வருகிறார். இவர்களின் காம்போவில் முன்னதாக 'மெர்சல்' படத்தில் வெளியான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது போக விஜய்யின் 'சர்கார்', 'பிகில்' உள்ளிட்ட படங்களில் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.