தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யும் அஜித்தும், 'வாரிசு' மற்றும் துணிவு ஆகிய ஆகிய படங்களில் நடித்து வருகின்றனர். இதில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகும்என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு' படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்புகளேஇன்னும் முடியவில்லை. விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றுள்ளது.
இதனிடையே 'துணிவு' படம்விஜய்யின் 'வாரிசு'படத்துடன் பொங்கலுக்கு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில்முனுமுனுத்துவந்த நிலையில், தற்போது இத்தகவலை நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமானஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர்பதிவின்மூலம் உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின்ஜில்லா படமும் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள்திரையரங்குகளில் ஒன்றாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Thunivu Grand World Wide Release On Pongal 2023 ??#AK61pic.twitter.com/kHd3G3Qows
— RK SURESH (@studio9_suresh) September 24, 2022