vijay in varisu and ajith in ak 61 will release in pongal 2023 - new information released

Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யும் அஜித்தும், 'வாரிசு' மற்றும் 'ஏகே 61' படத்தில் பிசியாக நடித்து வருகின்றனர். இதில் விஜய்யின் 'வாரிசு' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித்தின் 'ஏகே 61' படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என முன்னதாக தகவல் வெளியானது, ஆனால் தற்போது வரை படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் என எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித்தின் 'ஏகே 61' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் 'ஏகே 61' படமும் வெளியாகவுள்ள இந்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒரே தேதியில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2001-ஆம் ஆண்டு விஜய்யின் 'ஃப்ரண்ட்ஸ்' மற்றும் அஜித்தின் 'தீனா', 2007-ஆம் ஆண்டு விஜய்யின் 'போக்கிரி' மற்றும் அஜித்தின் 'ஆழ்வார்', 2014-ஆம் ஆண்டு விஜய்யின் 'ஜில்லா' மற்றும் அஜித்தின் 'வீரம்' உள்ளிட்ட படங்கள் ஒரே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.